வானவில்
வானவில்
பூமி அப்பொழுதுதான்
குளித்து முடித்து
ஒட்டியிருந்த நீரை
வீசிய காற்றில்
உதறி கொண்டிருந்தது
அது தூவானமாய்
எல்லா பக்கங்களிலும்
விசிறி கொண்டிருந்தது
பூமியை
குளிக்க வைத்த
களைப்பில் வானம்
ஓய்வெடுத்து
கொண்டிருந்தது
எங்கிருந்தோ சூரியன்
எட்டி பார்த்தது
வண்ண வண்ணமாய்
வானவில்
வானத்தில் வளைந்து
கண்ணுக்கு விருந்தாய்
காட்சி தந்தது

