எல்லாமே இரசனைத்தான்
மழைச்சாரலை இரசித்தேன்...
மெய் மறந்து இரசித்தேன்...
மரம் நனைந்தது..
செடி நனைந்தது...
பூ நனைந்தது...
காய் நனைந்தது...
துளசி மாடம் நனைந்தது...
திண்ணை நனைந்தது...
தூண் நனைந்தது...
மேற்கூரை நனைந்தது....
மதில் நனைந்தது...
தென்பட்டனவெல்லாம் நனைந்தது...
கொடியும் நனைந்தது...
கொடியோடு காய்ந்த துணியும் நனைந்தது
பிறகென்ன -
மழைச் சாரல் ஓய்ந்தும்...
மனைவியின் தூற்றும் சாரல் ஓயவில்லை
அதனையும் இரசிக்க ஆயத்தமானேன் !
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
