யுகம் மாறும் யூகம்

நீர் நிரம்பி நிலங்கள் யாவும் மூழ்கும்
மரங்கள் மலைகள் அளவு நீருயரும்
கற்கள் பாறைகள் இரும்புகள் என
எல்லாம் நீரின் வேகத்தால் இடம்பெயரும்
கதிரின் காந்த கதிர்கள் நீரை உறிஞ்ச
நெடுநாள் மூழ்கிய யாவும் அழுகி சிதையும்
அடைபட்ட கற்கள் குவிந்து மலையாகும்
நீரின் சுழலால் உருவான பள்ளங்கள்
ஏரிகள் குளங்கள் குட்டைகளாகும்
நீரின் இடைப்பெயர்வால் உருவாகும் பாதை
ஆறுகள் நதிகள் வீழ்ச்சிகள் ஓடைகள் எனவும்
பெரியதான அகழிகள் கடல்கள் எனப்படும்
மீண்டும் உயிர்கள் தோன்றியே மெதுவாய்
பரிணாமம் அடையும் உயிர்கள் பெருகும்
தவறுகளால் எல்லாமும் பிரியும் இது நிலையே
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Aug-21, 9:20 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 97

மேலே