போக பூமி
nerisait வெண்பா
மூன்றே விளைச்சலில் போகமெட்டாம் மாந்தற்கு
சான்றோர்சொல் பெண்ணணியா டைபாட்டு -- தோன்றிடு
பூவமளி யும்நல்ல போசனமு மாமிது
பாவமேழைக் கேபொருந் தாது
விவசாயி கண்டதெல்லாம் விளைச்சலில் போகம் ஒன்றெரன போதா
இரண்டென சரியாம் மூன்றென மகிழ்ச்சி
ஆனால் உல்லாச சல்லாப போகங்கள் எட்டாம் . அவைகள் முறையே
1. பெண்சுகம். 2 ஆடை3. அணிகலன் 4 . போசனம். 5தாம்பூலம்
6.. பரிமளம் 7 . பாட்டு 8. பூவமளி
இதில் ஒன்றிரண்டு போகத்தையே சிலரால் அனுபவிக்க முடிகிறது. மொத்த
போகத்தையும் ஏகபோகமாக மொத்த குத்தகைக்கு எடுத்து அனுபவிப்பது
ஒன்றிரண்டு பேர்களே.
........