கல்வி எனும் கள்ளச்சந்தை - நிலைமண்டில ஆசிரியப்பா
கல்விக் கானத் தேர்விற் காகவே
கட்டணம் செலுத்த இயலா நிலையில்
கற்கும் பிள்ளைகள் இருக்கிற தென்றால்
அங்கே கல்வியில் வியாபரம் என்பதாமே.
கல்வியைப் பயிலவே இனத்திலோர் ஒதுக்கிடு
என்றென நிலையுமே தோன்றின் அங்கே
அடிமைப் படுத்தும் குறுகிய மனிதரால்
பிரச்சனை பெரியதாய் உள்ளதாய் உணர்வாய்
அறிக்கை ஒன்றாய் செய்கை வேறாய்
நடக்கும் நபரிடம் நியாயம் என்பதை
எதிர்பார்த் தலென்பது மலரைக் கொண்டு
துப்பாக் கியின்குண் டையேபிடிப் பதாகுமே.
கல்வியில் உருவெடுக் குமின்றைய குறைகள்
கற்பவ ரையேஇழி நிலைக்கே இட்டுச்
சென்றிடும் சிலதினத் திலேஎன் பதையே
ஏற்கா வரையில் பற்றிடும் துன்பமே.
----- நன்னாடன்.