பட்டினியால் எவரும் சாகாத நாளே உண்மையான சுதந்திர நாள்

பிரிட்டனுக்கு பணிந்து அடிமைகளாய் பல்லாண்டுகள் வாழ்ந்தோம்
காந்தி, திலகர், படேல் போன்ற தலைவர்களால் திரண்டெழுந்தோம்
பாரதி, சரோஜினி நாயுடு போன்ற கவிஞர்களால் எழுச்சி கண்டோம்
ஒன்று திரண்டு பாடுபட்டு போரிட்டு அருமை சுதந்திரம் பெற்றோம்

எழுபத்துநாலு ஆண்டுகள் கடந்து உண்மை சுதந்திரம் கண்டோமா?
வயோதிகர்களுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்கிறோமா?
பெண்ணுரிமைக்கும் கவுரவத்திற்கும் மரியாதை தருகிறோமா?
சிறுவர்களை உண்மையாக சிறுவர்களாகவே நடத்துகிறோமா?
இளம் பெண்களை இரவில் சுதந்திரமாக செல்ல விடுகிறோமா?
சிறுவர்கள், பெண்கள் பாலியல் பலாத்காரத்தை அகற்றினோமா?
சிறுவர்கள், குடும்பத்துக்காக தொழில் புரிவதை தடுத்தோமா?
லஞ்சம் ஊழலை சமுதாயத்திலிருந்து வேரோடு அழித்தோமா?
சினிமாதான் பிரதானம் என்ற போதையிலிருந்து மீண்டோமா?
நடிகர்களை, நடிகைகளை கடவுளாக துதிப்பதை துறந்தோமா?
வெளிநாடு சென்று படிக்கும் மோகத்திலிருந்து விடுபட்டோமா?
சுற்றுப்புற சூழ்நிலை சமநிலையை, பராமரித்து வருகிறோமா?
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளை ஆதரிக்கிறோமா?
செல்வந்தன், ஏழை என்ற சமுதாய கோளாறை தகர்த்தோமா?
இயந்திரம் போன்று இயங்குகிற வாழ்விலிருந்து மீண்டோமா?

அநேக சீர்திருத்தங்கள் முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகிறது
ஏழ்மையை குறைக்கும் முயற்சிகள் மகிழ்ச்சியை தருகிறது
விவசாயத்தில் புரட்சி, தொழிலாக்கத்தில் அநேக மறுமலர்ச்சி
உலக நாடுகளின் கண்களில் இந்தியா செய்து வரும் கிளர்ச்சி

130 கோடியில் 98 சதவிகிதம் மக்களுக்கு உணவு கிடைக்கிறது
இது 98 சதவிகிதம் மக்களின் வயிற்று பசியை போக்குகிறது
ஆனால் மீதமுள்ள 2 சதவிகிதம் உயிர்கள் கதி என்னவாகிறது?
வெறும் காற்றும் தண்ணீரும் இந்த ஏழைகளின் உணவாகிறது
98 சதவிகிதம் மக்கள் மனது வைத்தால் இந்த நிலை மாறாதா?
மாறலாம், அதற்கு 98 சதவீகத்தினர் நடத்தை மாறவேண்டும்!

உளம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

ஆனந்த ராம்
.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Aug-21, 11:06 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 1622

மேலே