தாயின் மணிக்கொடி
உழுபவன் சிந்தும் வியர்வை
நெல்மணியாக விளைந்து
மக்களின் பசி பட்டினிக்கு
"சுதந்திரம்" கிடைக்கிறது ..!!
நாட்டின் எல்லையில்
ரத்தம் சிந்தும்
ராணுவ வீரர்களின் கைகளில்
நம் நாட்டின் "சுதந்திரம்"
பாதுகாப்பாக இருக்கிறது ...!!
காந்தி தேசத்தில் நடமாடும்
அரசியல்வாதிகளே
உங்களுக்கு கிடைத்த
"சுதந்திரம்"
மக்களின் வாக்குரிமை
என்பதை மறவாதீர்கள் ..!!
அரசியல்வாதிகளே
உங்களுக்கு
ஓர் இனிய வேண்டுகோள் ..!!
தயவுசெய்து
நாட்டு மக்களின் கையிலுள்ள
"சுதந்திரக்கொடியை"
பறித்துக்கொண்டு ...!!
அவர்களை
அடிமைபோல் நடத்தி
உங்களின்
"சுதந்திரக்கொடியை"
பறக்க விடாதீர்கள் ...!!
சுதந்திர தின நன்னாளில்
"தாயின் மணிக்கொடியை"
வணங்குவோம் ...!!
அனைவருக்கும்
இனிய சுதந்திரதின
நல் வாழ்த்துக்கள் ..!!
வாழ்க பாரதம்
வாழ்க மனித நேயம்...!!
--கோவை சுபா