சுதந்திர நாளில் , சுதந்திரமான எனது ஐம்பதாவது கவிதை

காவிரி நதியின் கரையினிலே நாம்,சுதந்திரமாக தமிழ் இசைப்போம்
பெரியாரில் நீள்படகினிலே, கேரளா தோழருடன் துடுப்பு இடுவோம்
கிருஷ்ணா நதியின் தீரத்திலே சுந்தர தெலுங்கில் பண்ணிசைப்போம்
துங்கபத்ராவின் தூய்மையிலே கன்னட நண்பருடன் அளவளவுவோம்
கோதாவரி நதிக்கரை ஓரம் வீரமராட்டியருடன் நாம் கலந்துவப்போம்
நர்மதா ஆற்று எழுச்சியில், குஜிஜுவின் கோலாட்டம் கண்டு ரசிப்போம்
சம்பல் நதியின் அழகை கண்டு, ராஜஸ்தானியரின் வீரம் வியப்போம்
சோன் ஆற்றில் மூழ்கி எழுந்து, மத்தியபிரதேசம் கண்டு களிப்போம்

தாமோதர் தவழும் மேற்கு வங்கம், தேசப்பற்று இங்கு முக்கிய அங்கம்
பிரம்மபுத்ராவின் மழைவெள்ளம் அசாம் மாநிலத்தின் சிறப்பு சின்னம்,
சந்திரபாகாவின் ஆரோட்டம் ஹிமாச்சலதின் இயற்கை வேரோட்டம்
சட்லெஜ் பாயும் மாநிலம், இந்திய வீரதியாகத்தை பறைசாற்றும் பஞ்சாப்
கங்கை பாரதத்தின் சந்நிதி, இந்நதி இல்லையெனில் என்னாகும் நம் கதி
இன்னும் அநேக மாநிலங்கள், ஒன்றிய பகுதிகள் நாட்டின் எல்லைக்குள்
எவ்வளவோ ஆறுகள், மலைகள், அழகிய இடங்கள் இவைகளுக்குள்
இவ்வளவு ஆறுகளும் ஓடி ஒரே கடலில் கலந்து ஐக்கியமாகின்றது
நாம் எங்கிருப்பினும் இந்திய மண்ணில் இரண்டற கலந்து விட்டோம்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஜெய் ஹிந்த்

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Aug-21, 11:21 am)
பார்வை : 2256

மேலே