வெம்புலி

"டுகுடுட்....டுகுடுட்.....டுகுடுட்..."
குதிரையில் கும்பலாகக் காட்டுப் பாதையில் சில திருடர்கள்....

நடுநிசி....

ஆலைய உண்டியலை உடைத்து எடுக்கப் பட்ட பண மூட்டையுடன் மகிழ்ச்சியில் அந்த கூட்டத்தின் தலைவன் வெம்புலி. பல நாட்கள் திட்டமிட்டு இன்று முடிந்தது. ஆனால், அம்மனின் நகைகள் இல்லாமல் போனது வெம்புலிக்கு வருத்தம். அதிகாலை மூன்று போல் ஆற்றோரம் இருக்கும் பாழடைந்த பல ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற ஒரு பெரிய வீட்டிற்கு வந்தடைந்தனர். "குதிரைகளுக்குத் தண்ணீர் குடிக்க ஆற்றோரம் கொண்டு போ" என்று தன் குழுவில் உள்ள ஒருவனுக்கு கட்டளையிட்டு, அருகில் சுற்றிலும் பார்த்தான் வெம்புலி. நிலா வெளிச்சம் இல்லாத அந்த இரவில் கைப்பந்தம் ஒன்றை கொளுத்தினான்.

நெருப்பின் வெளிச்சத்தில், கொட்டிய சில்லரை காசுகள் மின்னின. பணத்தாள்களை மட்டும் பொருக்கி பங்கு போட்டான். சில்லரை காசுகளைப் பிறகு எண்ணிக்கலாம் என்று அதை கட்டி ஒரு பெரிய மண் சட்டியில் வைத்து அதனை அங்கிருந்த சில கட்டைகளைக் கொண்டு மறைத்தான். அனைவரும் ஒன்று கூடினர். அந்த தீயின் வெளிச்சத்தில் ஒரு பல்லி சுவற்றில் தடுமாறி இருட்டில் ஓடி மறைந்தது. எங்கும் சிலந்தியின் ஒட்டடைகள், நெருப்பின் வெப்ப காற்றில் அசைந்துகொண்டிருந்தன.

"அடுத்த அம்மாவாசைக்கு, நெல்லி மலைக்கு போகனும்" வெம்புலி அமைதியாக கூறினான்.
அனைவரும் மௌனமாக இருக்க. கூட்டத்தில் கரும் தாடியுடன் ஒருவன், " யாரு வீடு? சத்தியமூர்த்தி நாடரா?".

" இல்ல இல்ல. பண்ணையார் தோட்டத்தில இருக்குது பாரு ஒரு வீடு".

" அங்க காவலுக்கு ஆட்கள அந்த பண்ணையாரு வச்சுருப்பாரே?".
மீண்டும் அந்த தாடிகாரன்.

" ஆமா. ஆனா, நல்ல கல்ல குடிச்சுட்டு தூங்கிக்கிட்டு இருப்பானுங்க. ரொம்ப இல்ல. மூனு பேருதான். சுப்பி வந்து சொன்னான் " வேம்புலி.
சுப்பி, இவர்களுக்கு வேவு பார்த்து கொடுப்பவன். ஒல்லியான உடல். பல ஊர்களுக்கு வெற்றிலை விற்பது போல், நோட்டமிட்டு தகவல் கொடுப்பான்.

" விடிய போது, இந்த வெள்ளி இங்க வந்துருங்க. இருக்கின்ற சில்லரய பிரிட்ச்சிக்கலாம் " என நெருப்பைத் துணியில் மூடி அமைத்து விட்டு தங்களின் இலக்கை நோக்கி பிரிந்தனர். வெம்புலி தன் இடுப்பில் இருந்த சுருட்டை பற்ற வைத்துவிட்டு அந்த வீட்டின் வாசலில் அமர்ந்தான். தனது குதிரைக் கனைத்திட, ஆற்று நீர் அமைதியாகக் கடலில் கலந்திட சென்றுகொண்டிருந்தது. அம்மாவாசைக்கு, பண்ணையாரின் தோட்ட வீட்டை கலவாட திட்டங்கள் போட்டவாறு சுருட்டைப் புகைத்து முடித்தான் வெம்புலி. பண்ணையாரின் வீட்டில் தங்க நகைகள் இருப்பதாக நம்புகிறான்.

வெள்ளியும் வந்தது. அனைவரும் ஒன்று கூட, கூட்டத்தில் ஒருவனைக் காணவில்லை.
" மருது எங்கடா? மறந்துட்டானா? " என வந்தவர்களை நோட்டமிட்டான்.
யாரும் எதுவும் கூறவில்லை. அனவரும் சில்லரைக் காசுகளைப் பிரித்தனர். மருதுவின் பங்கையும் வெம்புலியே வைத்துக் கொண்டான்.
" இனிமே இந்த இடம் வேண்டாம்..
அம்மாவாசைக்கு, பாக்குமரத் தோட்டத்துக்கு வந்துடுங்க. சில்லர காச ரொம்ப செலவு பண்ணாதிங்க. கோயில ஒடச்சது நம்பதானு தெரிஞ்சுருக்கு. அதனால இப்போதைக்கு பண்ணையாரு தோட்டத்துக்கு நம்ப போகல " என அதிர்ச்சியான தகவல் வேம்புலியிடமிருந்து வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

" ஆனா, அம்மாவாசைக்கு பாக்கு மரம். மறக்காதிங்க " என மீண்டும் தொடர , யாரும் எதுவும் சொல்லாமல் கலைந்து சென்றனர். கோயிலின் உண்டியல் அவ்வளவாக இவர்களைத் திருப்தி படுத்தவில்லை. இது வெம்புலிக்கும் தெரியும். இவர்களைப் பிடிக்க, சில புதிய ஆட்களை ஊர் தலைவர் ஞானவேல் அண்டை மாநிலத்தில் இருந்து கொண்டு வந்ததாக ஒரு தகவல் தனக்கு எட்டியிருந்தது.

அம்மாவாசை அன்று,

அனைவரும் பாக்கு மரத் தோட்டத்தில் ஒன்று கூடினர். அன்றய தினம் எவ்வாறு எங்கு முடியும் என அனைவரும் மௌனமாகப் பேசிக் கொண்டிருக்க... குதிரையில் வெம்புலி வந்து சேர்ந்தான்.
அடர்த்தியான புருவத்துடன், அனைவரையும் பார்த்தான்.
" இன்று நாம எந்த வேட்டைக்கும் போகபோறது இல்ல. இன்றோடு நாம சந்திக்க போவதும் இல்ல ", வேம்புலி. அனைவரிடமும் அதிர்ச்சி அலை. குதிரையில் இருந்து வெம்புலி இறங்க, அனைவரும் குதிரையில் இருந்து இறங்கினர். ஒவ்வொருவரிடமும் சிறு மூட்டை ஒன்றை வீசினான் வேம்புலி.

" இதுவரைக்கும் நான் சேர்த்த சொத்துல கொஞ்சம் " வெம்புலி.

இறுதியாகக் குழுவில் இருக்கும் ஒருவனின் அருகில் வந்தான். தன்னிடம் இருந்த கடைசி மூட்டையைக் கொடுத்தான். அதிர்ச்சியாக அதை வாங்கிய அவன் வேம்புலியையேப் பார்த்தான். அவனிடம் நெருங்கியக் காரணம் புரியவில்லை. திடீர் என்று, வெம்புலி தன்நிடம் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து அவனின் வயிற்றில் குத்தினான். பலமாக அவனை அறைந்தான். சுருண்டு விழுந்தான். வந்தவர்களிடம் சலசலப்பு. இறுதி மூச்சுகளுடன் ரத்தத்தில் அவன் தரையில்.
" உன்னுடைய செருப்பு, யானை தோலில் செஞ்சது. அது சுலபமா இங்க கிடைக்காது. வெள்ளி கிழமை நீ போட்டுட்டு வந்த. அந்த செருப்பத்தன் நம்பல கூண்டோட பிடிக்க வந்தவனுங்க போட்டு வந்திருக்கானுங்க. அதுல இருந்து பல நாள் உன்ன கவனிக்க ஆள் அனுப்புன. என்னோட சந்தேகம் சரியா இருந்தது. ஞானவேல் ஆளுங்க இவன் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கானுங்க. காசு கொடுத்து நம்பல பிடிக்க திட்டம் போட்டுருக்கானுங்க. இப்ப கூட, நம்ப ஆற்ற கடக்கும் போது நம்பல பிடிக்க அங்க பதுங்கி இருக்கானுங்க. எல்லாரும் தனியா வேற பக்கம் போய்டுங்க. சீக்கிரம்!!" என்றவுடன் , இதுவரை நடந்ததை நம்ப முடியாது குதிரைகள் இருட்டில் ஓடி மறைந்தன. நகை மூட்டையுடன் ரத்தத்தில் அவன் மடிந்து கிடந்தான்.
சற்று நெர்த்தில் இன்னொரு குதிரை கும்பல் அந்த பாக்கு தோட்டத்திற்கு வந்தது....

#siven19
வெம்புலி

எழுதியவர் : Siven19 (18-Aug-21, 12:09 am)
சேர்த்தது : siven19
பார்வை : 81

மேலே