என் அன்பான


"அழகிய செந்நிற வானம்....
அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று....."

அழகான பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, சேது அந்த இரவில் தனியாக தன் மகிழூந்தில் பல நினைவுகளுடன் சென்றுகொண்டிருந்தான்.

அருகில் தன் மனைவி இல்லாததை அந்த தனிமையான இரவும் அந்த பாடலும் அவனுக்கு நினைவூட்டியது. மனைவியோ விவாகரத்துக் கோரியுள்ளாள். தன்னை நன்குப் புரிந்துகொள்ள நான்காண்டு பழகியும் , வாழ்க்கையில் நாம் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்கும் போது காதலிகளைப் பிரிந்த சேதுவிற்கு மனைவியும் பிரிந்தது ஏற்று கொள்ள முடியவில்லை. காலம் மருந்தாகட்டும் என ஒவ்வொரு நாளையும் கடந்தான். தன் அனுப்பும் எந்த 'WhatsApp' க்கும் பதில் அளித்து ஆண்டுகள் ஆகி விட்டது. இருந்தும், தன்னை முற்றிலும் 'block' செய்யாமல் இருப்பது தனித்தீவில் மாட்டிய ஒருவனை கடக்கும் தூரத்து கப்பல் போல் தோன்றியது. அவப்போது அவள் சில தத்துவ படங்களை 'WhatsApp statues' இல் போடுவாள். பொதுவாக புதிய வாழ்க்கைத் தேடல் போன்று அமையும். இன்று கூட ' பழங்களை மாற்ற , மரத்தின் வேர்கள் மாற வேண்டும்' என ஒரு தத்துவத்தை தன் மனைவி போட்டிருந்தாள். அவளின் கோபத்தைத் தூண்டுவதைப் போல எதையும் பகிராது, அவளுக்குப் பிடித்தமான தகவல்களைப் பகிர்வான் சேது. எந்த நேரத்தில் சுவரில் மாட்டிய அழகான படம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கும் என யாராலும் சொல்ல முடியாது. எறும்பு ஊர கல்லும் தேயும் என்பர். ஆனால், நம் ஊதிட சூரியன் அமையுமா என்பதுதான் மனைவியின் குணம்.

தன் தாயர் வீட்டிற்கு அவப்போது வருவான். விரைவில் தன் தாயாருடன் தங்க முடிவெடுத்துவிட்டான். சிறு வயது முதல் அங்கு தங்கியதால், மனதிற்கு ஆருதலாக அமையும் என நம்புகிறான்.
இவளே என் இறுதி மனைவி என தன் திருமண நாள் அன்று, வந்தவருக்கு நன்றி கூறி சபதம் செய்த கல்யாணம்.
மீண்டும் இன்னொரு மனையுடன் வாழ வாய்ப்பே இல்லை என முழுதும் நம்பினான். மழை பெய்து விட்டிருந்த அந்த இரவு.

" அம்மா, வீட்டுல சாப்பாடு இருக்கா ? கிட்ட வந்துடேன்", சேது.

" அய்யா... இருக்கு யா. சாப்பாடு இருக்கு. சமச்சுடேன்", அம்மா.

" OK மா ", என்று அழைப்பைத் துண்டித்து விட்டு, பயணத்தைத் தொடர்ந்தான் சேது.

வீட்டை அடைந்தான். கை கால்களைக் கழுவிவிட்டு அமர்ந்தான்.

" சோறு போட்டு வறேன்?" அம்மா.

சரி என்பது போல் தலையாட்டினான்.

சாம்பாருடன் பொரித்த முட்டை தன்னிடம் வந்தது. தன் வீட்டித் தோட்டத்து முருங்கைக் காய்கள்.

"அப்பளம் பொரிக்கட்டா?" அம்மா.

வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
ஒரே மகனை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கசங்கியது முருங்கை மட்டும் அல்ல, தன் திருமண வாழ்வும் தான் என்பது போல்
ருசிக்க முடியாமல் பசிக்காக உண்டு முடித்தான்.

உறங்கும் முன் தன் அழைப்பேசியை எடுத்தான்.

" என் அன்பான மனைவி நித்தியாவிற்கு...
நான் எழுதும் இறுதி மடல்..."

#siven19
என் அன்பான..

எழுதியவர் : Siven19 (19-Aug-21, 4:22 pm)
சேர்த்தது : siven19
Tanglish : en anpana
பார்வை : 249

மேலே