தொடரும் வலிகள்நினைவுகள் - சகி

எத்தனை முறை
முயன்றும் சில
வலிகளையும்
ஏமாற்றங்களையும்
மறக்க முடியவில்லை....

மனதில் மறைந்து கிடக்கும் ஏமாற்றங்களையும் ஆழமான
காயங்களை யாரும்
உணரப் போவதில்லை....

நாம் பேசுவதை
சிலருக்கு பாரமாக
தொந்தரவாக இருக்கிறது...

நிரந்திரமாக விலக
விதி என்று வழி விடுமோ....

மூச்சுக்காற்று எப்போது
நிற்கும் நிலை வருமோ....

மனம் விட்டு
பேச உறவு ஒன்றை
தேடுது உள்ளம்....

எத்தனை உறவுகள்
இருந்தாலும் மனம்
அனாதையாக கிடைக்கிறது....

எழுதியவர் : சகி (21-Aug-21, 4:11 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 983

மேலே