பூட்டிய வெளிச்சங்கள்
உனக்கென்ன விருப்பம்
அச்சாளரத்தை திறக்க
சதா முயலும் உன்
விரல்கள்
எதைக் காண
துடிக்கிறாய்
நீ
அப்படி
ஒருவேளை அடுத்தவனையா?
அதிர்ந்த குரலோடு
கத்துவான் கணவன்
மறுநொடி
துடிப்படங்கி
மூடிக்கொள்ளும்
மனமும்
காண முயன்ற
உன்
விழிகளும்
உன் வெளிச்சத்தை
பறிக்கவே
முன் உரைத்தானோ
இமை போல்
உன்னை
காப்பேனன...