வாரி வழங்குகிறதாம்
சொல்லாமல் வாழ்கிறதா ?—இல்லை
சொல்லிவிட்டு வருகிறதா ?
வறுமைக்கு தான் வெளிச்சம்
வாழும் மக்களில்
வறுமையில் வாடுபவர்கள்
மொத்த சனத்தொகையில்
மூன்றில் ஒரு பங்காம்
இருக்க இடமும், உண்ண உணவும்
நீரும் கிடைக்காதபோது
வாழ வழி தெரியாம
வாழ்வை இழப்பவர்கள்
நம் தேசத்தில்
நாற்பத்தைந்து கோடியாம்
ஆறுதல் அளிப்பதுபோல்
அகிலமெங்கும் கொரோனாவாம்
இதிகாசக் காவியங்கள் போல்
இந்திய நாட்டில் வறுமை மட்டும்
அழியாமல் வாழ்கிறது
எவருக்கும் அக்கறை இல்லாததால்
கொரோனாவும் , கொட்டும் மழையும்
கைகொடுத்து உதவுகிறதாம்
மக்கள் கஷ்டத்தை போக்க
மரணத்தை வாரி வழங்குகிறதாம்