உயிர்த்திரு
விலகல் பெரும் வலி
அதனைவிடப் பெருவலி புரிதலில்லா உறவைச் சுமந்து திரிவதுவும்,
மூச்சுத் திணற ஒவ்வோர் தடவையும்
அதனுள் மூழ்கி எழுதலும்.
விலகல் வெறுமை தான் என்றாலும்
சற்று ஆசுவாசப்படுத்த முடிகிறது.
பாதை இலக்கற்றுத் தான் போய்விட்டது
ஆனாலும் பாதங்கள் அழுந்தப் படிகின்றன மண்ணில்.
பறப்பும் சிறகடிப்பும் இல்லாதொழிந்தாலும்
பறவை உயிரோடிருக்கிறது இன்னும்;
பறத்தலின் கணிதம்
அணிந்து அது மீண்டும் பறக்க...
இது போதாதா…?
நர்த்தனி