சுகமான பருவம்
காலங்கள் கடந்தாலும்
பள்ளி பருவத்தின்
நினைவுகள் என்றும்
நம் மனங்களில்
பசுமையாக இருக்கும்
அழியாத கோலங்களே...!!
முதுமையான பருவத்தில்
நமது பள்ளி பருவத்தின்
இனிமையான நினைவுகளை
பின்னோக்கி பார்ப்பதில்
சுகமான சுகங்களே...!!
அதிலும் பள்ளி தோழன்
ஒருவன் கிடைத்து விட்டால்
இளமையின் துள்ளலுக்கு
வானம் தான் எல்லை ..!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
