சென்னை பிறந்த தினம்

சென்னை பிறந்த தினம்

செதுக்கினால் கிடைக்காத சிற்பம்
பல மனிதர்களை வாழ வழிவகுத்தவரே
பலருக்கு வாழ்க்கையை தந்தவரே
பலரை இன்றும் ஆதரிப்பவரே
பலரை செல்வந்தராக்கியவரே
பிற மாநிலத்தவர்களை வாழவைத்தவரே
உலகரங்கில் தமிழகத்தை தலை நிமிர வைத்தவரே
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்
நீ பிறந்து 380 ஆண்டுகள் ஆனாலும்
உன்னுடைய அழகு கூடிக் கொண்டே உள்ளது
உன்னை பார்த்து சில நேரங்களில் நான்
வியக்கிறேன் என்றென்றும் நீயும் செழிக்க
வேண்டும் நாங்களும் செழிக்க வேண்டும்
இப்படிக்கு உன்னால் வாழும் வாழ்ந்து
கொண்டிருக்கும் தமிழன்.

எழுதியவர் : (22-Aug-21, 2:07 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 32

மேலே