யுத்த காயங்கள்

மகிழ்ச்சியில் வெடிக்கும்
துவக்கு சன்னங்கள்
தூரமாய் கேட்கும்
உலங்குவானூர்தி சத்தங்கள்
காதைக் கிழிக்கும்
கிபிரின் இரைச்சல்கள்

யுத்த வெற்றி தினமென
பேரினவாதம் கொண்டாட
ஆறாத காயங்களுடன்
யுத்த நினைவுகளில்
விழிபிதுங்கி பதுங்குகின்றது
தமிழனின் தலையெழுத்தென.

எழுதியவர் : பெல்ழி (23-Aug-21, 4:54 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : yuththa KAYANGAL
பார்வை : 829

மேலே