அடியரிந்த மரம்போலே உடல்கள் விழுமே

பணமீட்ட பலவழிகள் புற்றீசலாய் நாட்டிலே
படுகொலையும் பலாத்காரமும் ஒரு வகையாம்
பகலிலே வழிப்பறியும் நகைப்பறிப்பும் ஒருவகையாம்
இரவிலே முகம்மூடி கதவு உடைத்தல் ஒருவகையாம்
கள்ள சாவியால் வாகனம் கவர்வது ஒருவகையாம்
கத்தியால் உடல்கீறி பணம் பிடுங்கல் ஒருவகையாம்

கைப்பேசியில் காமம் பேசி மிரட்டி பணமீட்டலும்
காதலனாய் கைக்கோர்த்து களவியை படம்பிடித்தும்
காட்டில் காதல் தனிமையில் ஆள்களை ஏவியும்
கள்ளமாய் காதல் பேசி மணமானவரை மயக்கியும்
தவறிய அழைப்பை தொடர்புற்று காம வார்த்தையாலும்
உடைகொடுத்து காதலை நைந்து பேசி வீழ்த்தியும்

குழுவாய் உறுப்பினரைச் சேர்த்து குதிரான பணமும்
நகை அட்டையில் உழைப்போரை சேர்த்து ஒருவகையில்
இணைய விளையாட்டில் பந்தயம் கட்டிட கூறுதலும்
கவர்ச்சி விளம்பரம் கவினாய் சொல்லி இழுப்பதும்
தள்ளுபடியில் தங்கத்தை தருவதாய் தலுக்காகவும்
ஈட்டுகின்றனர் இந்நாளில் பணத்தை பல வழியில்

குமிழ் போன்ற இவைகளை குதுகலமாய் பார்த்தாலே
குலைநடுங்கும் பேராபத்து பின் தொடரும் தன்னாலே
மலையெனவே இருக்கும் குடும்பம் மடை உடையும் பின்னாலே
அடியரிந்த மரம்போலே உடல்கள் விழுமே இறப்பாலே
மனம் விரும்பும் காம போதை இழுக்கையே தருவதாலே
விலகியே இருந்திடுவோம் வியாபாரம் செறிந்த உலகையே.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (24-Aug-21, 8:07 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 49

மேலே