சிலாசத்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கல்லடைப்பு மேகங் கனதூலம் வித்திரதி
சொல்லடைக்கு நீர்அருகல் சோணிதக்கால் – மெல்லிடையார்க்(கு)
இல்லகச்சத்(து) இல்லையெனும் இந்திரிய நட்டமுமாங்
கல்லகச்சத் தில்லையெனுங் கால்

- பதார்த்த குண சிந்தாமணி

சிலாசத்து கல்லடைப்பு, சீழ்மேகம், உடற்பருமன், வித்திரதி, கிரீச்சரம், சோணித வாதம், விந்து நட்டம் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Aug-21, 8:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே