நட நட நட

நட நட நட;
தமிழா நட நட;
அட அட தமிழா
அநியாத்தைக் கண்டு
பூனையாய் கிடக்காது;
புலியாய் பாய்ந்து நட;
துள்ளி ஓடும் புள்ளிமான்தான் என்று நினைப்பவனை;
புரட்டி போட்டுவிடலாம் நட;
தடையில்லாமல் நட;
தடுமாறாமல் நட;
தன் நம்பிக்கையுடன் நட;
தைரியமாக நட;
தமிழனுக்கு உண்டு வீரம் நட;
தமிழன் படை இருக்க தடைபோட யார் இருக்கா தரணியில், நட;
தொடை நடுங்கட்டும் பகைவர்கள்;
தொடுவானமே நம் எல்லை;
தொல்லைகளை விரட்டிட;
உன் தாய் மண்ணை தொட்டு முத்தமிட்டு, நட

சுயநலம் இன்றி நட;
சுறு சுறுப்பாய் நட;

சும்மா இருக்காது; சுற்றிச் சுற்றி வராது,
சுறு சுறும்புடன் நட;
விரு விருப்புடன் நட;
விரைந்தே செயல்பட நட;
வீரத் தமிழ் மகனாய் நட;

வீற்றிருந்த காலம் போதும்;
சொந்த பூமியில் சோற்றுக்கு, அடிமையாக வேண்டாம்!
செத்த பயல்களோ,
சொத்த பயல்களோ இல்லை, நாம்;
சோடைபோக வில்லை நாம்;
சேற்றை மிதித்தே நட;
சொந்த புத்தியுடன் நட;
சொந்த பூமியில் சுகமாய் நட.

விடுவு தேடி நட;
விருப்பத்தோடு நட.

உப்பிய உடம்பு சுறுங்கட்டும் நட;
உணர்வுகள் பொங்கட்டும் நட;
உணவு செறிக்கட்டும் நட;
ஒற்றுமை தேடி நட;
உன் கரங்களை உயர்த்தி,
உன் வெற்றி முழக்கத்தை முழங்கி நட.

நீ ஒருவன் இல்லை,
உனைக்குபின் பல்லாயிரம், கால்களும், கரங்களும் உண்டு நட;
உன் பயணம் முடியவில்லை நட;
தடையை உடைத்து நட;
தடுமாறாமல் நட;
தடி அடி பட்டாலும்,
தமிழன் நீ,
தன்மானம் காக்க நட;
தாய் மண்ணைக் காக்க நட;
தள்ளி நிற்காது நட;
தைரியத்தை பூசி நட;
வைரம் பாஞ்ச நெஞ்சோடு, வைராக்கியமாய் நட;

கிடப்பது கிடக்கட்டும்,
வலது காலை எடுத்து வைத்து நட;
வறுமையை நீக்க,
வரும்முன் காக்க நட;
விழிகள் எல்லாம் திறக்கட்டும்,
வீட்டுக்குள்ளும் நாட்டிலும் பஞ்சம் ஒழியட்டும்;
விடிவு காலம் வந்து விட்டது என்றே நட.

வாழ்க்கை மலரட்டும்;
தோள்கள் வலிமை பெறட்டும்
வலிகளை தாங்கி நட;
வழிகளைத்தேடி நட;
விழிகளில் வடிக்க வேண்டாம் கண்ணீர்;
விழுந்து புரண்டு அழவேண்டாம்;
இனி நமக்கு விடிவு காலம் என்றே விரைந்து நட;
அநியாயத்தை மிதித்து; நியாயத்தைக் காக்க நட.

நினைவிருக்கட்டும் உன் இனம் விழப்பிறந்த இனம் இல்லை;
வாழப்பிறந்த இனம்;
வாழ்ந்திடுவோம்; வாழ்தட்டும் உலகம் நட.

உன் புருவம் புடைத்திட நட;
பருவ ஆசைகளை பார்த்து ரசிக்காலம் பின்பு நட;
விடியும் பொழுது நமக்கே என்று நட;
விடை தேடி நட;
விரட்டி வரும், பிரச்சனைகளை,
ஆக்கப் பூர்வ செயல்கள் செய்து,
அதட்டியே விரட்டி விடலாம் ;
தலை நிமிர்ந்து நட

தன்மானத்துடன் நட;
தடைகளை தவிடு, பொடியாக்கிவிடலாம் நட.

புழுங்கி இருக்காது,
புழுதிகளை கிளப்பி,
நட

புரிந்து கொள்ளட்டும் இது புது வெள்ளம்
தங்கு தடை இன்றி இது செல்லும்
என்றே தைரியமாக நட
நிமிர்ந்து நட
நீல்வானம் நின் நடைகண்டு
கதறட்டும்;
நிழல்குடை பிடிக்கட்டும்;
கதிரவன் கண்டு ரசிக்கட்டும்;
கடல் அலைகள் அடித்து சிரிக்கட்டும்,
நட.
நேர் பார்வையுடம் நட;
நேர்தியாக நட;
வஞ்சகனிடம் வாய்ப்பேச்சு பேசாது,
நெஞ்சில் ஏறிமித்திடவே நட;
வெற்றிக்கொடி விரியட்டும்,
பிரளயங்களையும்
பிடித்து தடுத்துவிடலாம் நட,
பிரபஞ்சத்தையே பிழிந்துவிடலாம் நட.


இளைஞர்கள் படை இருக்க,
இனி எதற்கு கவலையும் துக்கமும்;
துடைத்து போடு துக்கத்தை
வெட்கத்தை விரட்டி விடு;

தென்றலும் தீயாய் எரியட்டும்;
தீண்டியவன் கரங்களை, துண்டித்துவிட விரைந்து வா,
பெரும் கடலின் பிரளையமே
பிடிவாதத்துடன் வா;
பிடித்து நடக்க வரவில்லை;
படுத்து உறங்க வரவில்லை;
படும் தொல்லைகளை, விரட்டியடிக்க நட;
படை எடுத்து நடந்து வா;
பழம் பெருமையை நிலைநாட்ட வா.

வெந்து சாவதை விட,
திண்று தீர்ப்பதைவிட,
நன்றாய் வாழ,
வென்று வாழ நடை போட்டு வா.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (24-Aug-21, 6:12 pm)
Tanglish : nada nada nada
பார்வை : 53

மேலே