"இயற்கை அ (ழிவு) ழகு"
"இயற்கை"
மொத்த அதிசயங்களில்
மூத்த அதிசயம்....
மனிதன் மரங்களை வெட்டினான்
மழை மறதிக்குள்ளானது....
காட்டுக்குகைகளை குடைந்தான்
விலங்கினங்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது...
அருவி,காடு,மலைகள்,வயல்வெளிகள்,மரங்கள்,
பூந்தோட்டங்கள், இவைகளை சுற்றி பாதுகாக்க வேண்டிய நாம்,
சுற்றி பார்த்து கொண்டிருக்கின்றோம்....
மனிதன் ஆசைக்கு அடிமையாக அடிமையாக
இயற்கை அன்னையின் ஆயுள் குறைகிறது....
விளைவு......
சில மனிதர்கள் காடுகளில் குடியேறினர்,
விலங்குகள் வீடுகளில் குடியேறின,
மனிதன் நாயாய் அலைகிறான்
நாய் வீட்டை காக்கிறது....
இயற்கை வளங்கள் ஒவ்வொன்றும்
என் போல் கவிஞனுக்கு
கற்பனையை உரைக்கும் தாயல்லவா...
ஜலதோஷம் பிடிக்கும் என்றாலும்,
நனைய துடிக்கும் மழை வேண்டாமா...
இழப்பது வாழ்க்கை என்பதை
தவறாக புரியாதே மனிதா....,
ஆம்....,
மழை.... மேகத்தை இழந்து
நம் தாகத்தை தீர்ப்பதில்லையா...
அதுப்போல் இழப்பென்பது
வாழ்க்கையை கொடுக்க வேண்டும்
வாழ்வை கெடுக்கக்கூடாது.....

