கயவர்கள் சுட்ட வடு
"தீமினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு."
பச்சமண்ணு இது ஒன்னும் தெறியாத
சின்ன கண்ணு இது!
இதுக்கு உரு தந்தது யாரு,
நீதானே?
உரு தந்த நீ வழி காட்ட
மறந்துட்டியே?
நட்டநடு வீதியில் யாரும் தொட்டாக்க
தட்டிவிட்டு ஒடிவர சொன்ன நீ...
நட்டநடு வீட்டுலயும் ஓடச் சொல்லி
சொல்லாதது ஏனோ?
சொந்தக் கூட்டுக்குள்ளேயும் செத்து செத்து
இருக்கனும்னு சொல்லாம போனாயே...
நெஞ்சுக் கூட்டுக்குள்ள பட்டவடு
மறைய மாட்டன்னு ஒட்டிக் கெடக்கு...
பசுமரத்தாணி போல பதிஞ்சுக்
கெடக்கு மனசுக்குள்ள...
கண்மூடி சொகமா தூங்கி வருஷக்கணக்கா
ஆகிப்போச்சு, மனசுக்குள்ள ரணமா வலிக்குது!
தன்ன மறந்து தூங்க மருந்து
ஒன்னு கெடைக்களையே!!
பச்ச மண்ணுக்கு அர்த்தம் ஆகல, ஆனா
வளர்ந்த பின்ன புளுவா துடிக்குது!
நீ கொடுத்த உருவுக்கு நல்ல வாழ்க்கை
கொடுக்க மறந்துட்டியே!
உசுரு இருக்கும் வரைக்கும் இந்தப் புளுவுக்கு
வேதனை குறையாதா?
யெங்கடமை இன்னும் தீரலையே, தீரும் வரை இந்த
உசுரு கூட்டுக்குள்ள உடைஞ்சு கிடக்கு!
கடமை தீர்ந்த பின்னாடி, இந்த கூட்டைவிட்டு பறக்கும் இந்த உசுரு...
நாவினால் சுட்ட வடு மட்டும் அல்ல
"கயவர்கள் சுட்ட வடுவும் ஆறாது" இடுகாடு சென்று அடையும் வரை.