கெண்டைக் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அண்டையில்நிற் பார்களுக்கும் ஆரோசி கங்காணும்
பண்டையுள நோய்முதிர்ந்து பாரிக்குங் - கெண்டையுண்டால்
வாயுவுமுண் டாகும் வயிற்றுவலி யுஞ்சேரும்
நீயும் அறிவாய் நிசம்
- பதார்த்த குண சிந்தாமணி
கெண்டை மீனைத் தின்றால் நல்லருசியைக் கொடுக்கும்; அடங்கிய பழைய நோய்கள், வாதம், குன்மம் இவை அதிகரிக்கும்