பேதிக் கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பேதிதனை யுண்டாக்கும் பித்தந் தனையெழுப்புந்
தோதக் குடலதனைச் சுத்திசெய்யும் - ஓதியகால்
பேதிக்குந் தாதுவைப்பெ ருக்கிவிடும் எப்போதும்
பேதிக்கி ழங்கதனைப் பேசு
- பதார்த்த குண சிந்தாமணி
இதன் கிழங்கு பேதி, பித்தம், குடற்சுத்தி, வீரியவிருத்தி இவற்றையுண்டாக்கும்; வாதத்தைக் குறைக்கும்