அமுக்கிராக் கிழங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகயஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு - விஞ்சி
முசுவுறு தோஷமும்போம் மோகமன லுண்டாம்
அசுவகந் திக்கென்(று) அறி

- பதார்த்த குண சிந்தாமணி

இக்கிழங்கு சயம், வாதசூலை, வாதக்கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், நீரேற்றம், தோடம் இவற்றை நீக்கும்; மாதர்மேல் விருப்பை யுண்டாக்கும்; நல்ல பசியெடுக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Aug-21, 7:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே