காற்றில் கலந்த உயிர்
"சார், [ cigarette ] குடிக்கிறது நல்லதா, சார் ? " ஒரு கல்லூரி மாணவன் தன் வீட்டின் அருகில் வசிக்கும் சீலன் எனும் ஆசிரியரிடம் கேட்டான்.
" சரி, நா ஒரு கேள்வி கேக்கட்டா?" ஆசிரியர் அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
கேள்விகளைக் கேட்பதே ஆசிரியர்களின் வேலை என மாணவர்கள் வெருத்து வந்த காலம் அது..
ஆசிரியர் சீலன் தொடர்ந்தார்...
" நீ வீட்டுகுள்ள போற, உன்னோட பொண்டாட்டி வேற ஒருத்தன் கூட ஒன்னா இருக்கா..!! அத பார்த்த உனக்கு எப்படி இருக்கும் ? "
" சார், கண்டிப்பா கோவம் வரும் சார் ", அந்த மாணவன் ஆசிரியரின் இந்த கேள்விக்கு ஆச்சிரியமாகப் பதில் அளித்து சமாளித்தான்.
" ம்ம்..... இப்ப நீ வெண்சுருட்ட அடிக்கிர..., கவலையோ, கஷ்டமோ, ஜாலியா இருந்தாலும் காச காத்துல ஊதி ஊதி திடீர்னு [ heart attack ] வந்து செத்து போர..." ஆசிரியர் வலையைப் பின்ன
ஆர்வமாக மாணவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆசிரியர் தொடர்ந்தார்,
" இப்பலாம் புருஷன் உயிரோட இருக்கும் போதே பூந்துரானுங்க. செத்து போய்ட்ட. அவ, ரெண்டாவது கல்யாணம் பண்ணிப்பா. [ hall ] ல உன் [ photo ] முனுக்கே ஒன்னா வாழுவாங்க. உன்னோட வீட்டுல, உன்னோட பொண்டாத்தியும் பிள்ளைகளும் அவன் கூட இருப்பாங்க, " தலை சாய்த்தப்படி கேள்வியாக அவனைப் பார்த்தார்.
பதில் கூற முடியாமல், கிடைத்த வினோதமான பதிலுக்கு மௌனமானான் அந்த மாணவன்.
வெண்சுருட்டு, பீடி, சுருட்டு என ஊதி,
'tar' , ' nicotine' மற்றும் பல நச்சுக்கள் : தூசி படிந்த மின்விசிரிபோல் நுரையீரலை கரை படுத்தி உடலுக்குத் தேவையான உயிர்வளியைக் கொடுக்க முடியாமல் திணரி நம் உடலை, காசு கொடுத்து வதைக்கும் மனிதர்களே...என்னைப் போல் தந்தையை இதனால் இழந்தவனின் நிலமை, உங்கள் பிள்ளைக்கு வரக் கூடாது.
நன்றி
#siven19