ஆகா ஓகோ
ஆகா! ஓகோ!
தெரு ஓரத்திலே
ஒரு பாட்டி,
இருக்காது அவளிடம்,
விலை உயர்ந்த அடுப்பு.
இருக்கும் அவளிடம்,
அடுக்கு அடுக்காக,
சுவையான பலகாரம்.
ஆகா ! ஓகோ ! என்றே,
வேண்டுவார் பலர்,
மகிழ்ந்தே அவரும்,
கொடுத்தே செல்வார்.
மீண்டும் வருவார் பலர்!
வந்தவர்கள் சிலர்,
பாட்டி ஞாபகம் இருக்கா?
என்றே கேட்பார்.
மனம் குளிர்ந்த
பாட்டியின் கண்கள்
கசிந்து விடும்.
பாட்டி அந்தப் பாட்டி,
என் வீட்டுக்கு
அன்னம் இடும் அன்னை.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.