மனிதக் கடவுள்
மனிதக் கடவுள்
*******
பாடம் சொல்லித் தருவார்
படிக்கச் சொல்லிப் பணிப்பார்
தேடும் அறிவைப் புகற்றி
திறமை வளரக் காண்பார்
கல்விப் பணி செய்து
காக்கும் மனிதக் கடவுள்
உள்ளத்து இருள் நீக்கி
ஒளிர வைக்கும் மனிதம்
நல்தடங்கள் நயமாய் காட்டி
தடுமாறா திருக்கச் செய்வார்
வல்லபா தையது தன்னில்
வாகைசூடி வாழ வைப்பார்
மனதினில் நேர்மை யொழுக்கம்
உணர்த்தியே யழகு பார்ப்பார்
குணத்தில் மேலோன் ஆக்கி
மணக்கும் படிசெயும் ஆசிரியர்
*****