ஓய்வு கொடுப்போம்
ஓய்வு கொடுப்போம்
அறுவை முடிந்த நிலம்
ஆறப்போட்டு இருக்கிறது
அதற்கும் ஓய்வு
தேவை
பெற்று வளர்த்து
நம் கையில்
நுனியோ இடையோ
பிள்ளை மணிகளை
ஒப்படைத்த ஆயாசம்
வித்தொன்று
போட்டுவிட்டோ
இளம் தளிர்
ஒன்றை நட்டுவிட்டோ
சுற்றி வர
மண் அணைத்து
கண் துஞ்சா
காத்து நின்றவன்
இவனென்றாலும்
பெற்றுக்கொடுத்து
வளர வளர
தாங்கி பிடித்த
தாயல்லவா
ஆயாசம் தீர
ஓய்வை அளிப்போம்
அடுத்த பிரசவ
காலம் வரை