உயர்ந்த தென்னை
உயர்ந்த தென்னை.
அங்கு ஒரு தென்னை ,
அதன் உயரம் புரிந்து விடும்,
அதை சுற்றி பல தென்னை,
அவைதனை பார்த்து விடின்,
அரைதான் இவர்கள் உயரம்.
எப்படி முடியும் இது?
ஒரே இடம் ஒரே காற்று!
ஒரே மழை ஒரே வெயில்!
சிந்தித்து பார்த்துவிடின்,
ஒரு பெற்றோர் பல பிள்ளை
ஒன்று உயர்ந்திருக்கும்.
இது எப்படியோ?
அதையே அந்த உண்மையை,
இறை உண்மையை, உரைக்கவே உயர்ந்தது
அந்தத் தென்னை.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.