கண்ணன் குழலோசை
என்வீட்டு எதிரில் வான் நோக்கி
நீண்டு வளர்ந்த மூங்கில் மரங்கள்
வசந்த கால தென்றல் வீச
மஞ்சள் வெய்யலில் மயக்கும் மாலைப்பொழுதில்
ஒய்யாரமாய் ஆட தொடங்கின மூங்கிலெல்லாம்
அதிசயமாய் குயிலொன்று மெல்ல மெல்ல
மாலைப்பொழுதில் வசந்தா ராகம் போட்டு கூவிட
கொஞ்சம் கண்மூடி குயிலோசைக் கேட்க நான்
இருக்க ..... எங்கிருந்தோ வந்து என்காதை
நிறைத்தது குழோசையில் ஒரு தேவகானம்
தெளிந்தேன் நான் அது ஆடிடும் மூங்கில்
தந்த குழலோசை என்று.... ஓ ஓ இல்லை இல்லை
மூங்கிலைதடவும் தென்றல் தென்றல் அல்ல
என் கண்ணன் என்னும் மன்னன்
இசைக்கும் வேய்ங்குழல் கானம் அது என்று
ஏனெனில் அதைக்கேட்டு கூவும் குயிலும்
கூவ மறந்து லயித்து 'சுப்பென்று மறக்க கிளையில்
குந்தி இருக்க.... அந்த குழலோசை
என் மனத்தைத் தொட்டது என்னுள்ளத்தை
உள்ளத்தில் இருக்கும் என்னாவியை ஆன்மாவை
கண்ணனைக் கண்டுகொண்டேன் அதில்
மூங்கில் தந்த அவன் குழலோசையில்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
