மர யானை

பிறப்பதற்கு
முன்பிருந்தே
செத்துப் போவதற்கு
காத்திருக்க
துவங்கி விடுகிறது
ஒவ்வொரு
உயிரும்...


கம்பியூட்டர்..
கவிதை..
கண்ணாமூச்சி..
என
மதங் கொண்ட யானை போல்
உறுமுமினாலும்,

இயற்கையின் நியதியில்,
செயற்கையின் இறுதியில்,
மத யானையின் வாழ்வு
மரயானை வாழ்வாகவே
முடிந்து விடுகிறது
எல்லா
உயிர்களுக்கும்...




✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (8-Sep-21, 10:59 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : MAR yaanai
பார்வை : 42

மேலே