உலகம்
"மொட்டாய் பார்த்த உலகம் புதியது ,
சிட்டாய் பறந்த உலகம் இனியது,
பட்டாக மலர்ந்த போது இளையது,
தங்கத் தட்டாக ஜொலிக்கையில் பெரியது ,
கைக்கெட்டாத துணை கிடைக்கையில் சிறியது ,
பேச்சை தட்டாது இணைந்து
நடக்கையில் எளியது,
மட்டாக துன்பம் எட்டி பார்க்கையில் வரியது ,
வயோதிகம் திட்டாக வந்து தாக்கையில் கொடியது,
ஆனாலும் இந்த வாழ்க்கைப் பயணம் மிக மிக நெடியது ,
அதற்குள் இவ்வுலகை புரிந்து கொள்வது மிக மிக அரியது.!."