விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்
"அந்த பிள்ளை யார்? "
"அன்னை தந்தையே 'உலகம்'
என்ற பிள்ளை,
தன்னை அண்டி வந்தோரின்
கலக்கம் போக்கும் பிள்ளை ,
யார் அந்த பிள்ளை ?
சுற்றி வரும் அன்பர்க்கு,
வற்றாத அருளை தரும் பிள்ளை, பாதங்களை பற்றி விடும் ,
பக்தர்களுக்கு சற்றும் குறைந்திடாத பொருள்
அளிக்கும் பிள்ளை,
யார் அந்த பிள்ளை ?
மதி கொண்டு தொழுதிட்டால்,
நற்கதி தந்து காத்திடும் பிள்ளை.
ஞான அதிபதியென வணங்கிட்டால்,
சகல சதியினின்றும்
காத்திடும் பிள்ளை.
யார் அந்த பிள்ளை ?
பார்வதியின் பிள்ளை !
பரமசிவனின் கிள்ளை!
அவர்தான் நம் 'பிள்ளையார்'!
அப்பிள்ளையை நினைத்து விட்டால்,
நல்மதியால் துதித்து
விட்டால் போதும்,
என்றுமே இல்லை,
நமக்கு தொல்லை!
"விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.