ஒரு கதை
ஒரு கதை
***********
பொறுமையாக
கேளுங்கள்,
ஒரு கதை
சொல்லப் போகிறேன்.
ஒருவன்
அப்பாவியாக
வருவான்..
அடடா...
இவன்
நல்லவனாக இருக்கிறானே
என்று
நாம் நினைக்கும் போதே
அவன்
இறந்து விடுவான்....
மீண்டும்,
அடங்காத காளையாக
ஒருவன் வருவான்
கெட்டவனை
துவம்சம்
செய்து விட்டு,
கெட்டவனின்
மகளையே
கைப்பிடிப்பான்
அந்த காளை....
கதை முடிந்தது.
உறவுகள்
பிரச்சினையும்,
நான்
இங்கே சொன்ன கதையும்
தவிர,
என்னதான்
இருக்கிறதென்றே
தெரியவில்லை,
கானொளியாக
நாம் கண்டு
களித்துக் கொண்டிருக்கும்,
இக்கவிதையின்
முதல் வரியைச் சொல்லி
ஆரம்பிக்கும்,
தமிழ் சினிமாவில்...
✍️கவிதைக்காரன்.