உன்மாற்று இதயம்

ஒன்னு ரண்டா உன்னை பத்தி பேசி
வெச்சன் ...
நீதானு யோசிச்சு ஓ மேல ஆசை
வெச்சன் ...

ஓரன்பு வலியையும் பழக்குது
பாரங்கள் பலவையும் தாங்குது
தோல்விகள் நிலைஇல்லை என்று சொல்லுது ...

கண்ணீலே காதலெனும் நூல்விட்டு கல்நெஞ்சை கரையவிட்டு நீநான் மட்டும் ஒன்றுபட்டு வாழ்ந்து காட்டலாம் ...

வாடா யம்மா வா
வாடா யம்மா வா...

இன்று என்னோடு நீ இருந்தால்
போதும்..
நாளையைக் கண்டு நான் வாழத்தேவை என்பது இல்லையே...

என்னன்பு பொய் என்றால்
எனைவிட்டு நீ சென்றால்..
மௌனம் பேசும் மொழியில்
எதைச்சொல்லி மெய்ப்பிக்க..

என்றும் நினைத்துன்னை
துணையா நீ வர ஏங்கும்
உன் மாற்று இதயம் எனதென்க...

எழுதியவர் : BARATHRAJ M (11-Sep-21, 4:35 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 91

மேலே