சொந்தம் இல்லாத பந்தம்

சொந்தம் இல்லாத பந்தம்;
பந்தம் இல்லாத பந்தம்
பழகியதால் வந்த பந்தம்;
பகை தெரியாத பந்தம்;
பலி தீர்க்கத் தெரியாத பந்தம்;
பங்கம் விளைவிக்காத பந்தம்;
சும்மா வந்த பந்தம்;
சுமையாய் நினைக்காத பந்தம்;
சுற்றம் இல்லாத பந்தம்;
சுற்றி சுற்றி வரும் பந்தம்;
சுடரும் ஒளியாய் படர்ந்த பந்தம்;

இது எந்த பந்தமும் இல்லாத பந்தம்;
எங்கிருந்தோ வந்து தொத்திய பந்தம்;
எடுத்துக் கூறமுடியாத பந்தம்;

பிறப்பால் வராத பந்தம்;
பிணைப்பால் வந்த பந்தம்;
பிரியாத பந்தம்;
பிழை இல்லாத பந்தம்.

தாதையர் தந்தையர் வழி வராது,
தானாக வந்த பந்தம்;
தடுமாறாது இருக்கும் பந்தம்;
தன்னலமற்ற பந்தம்;
தனக்கு எதுவானாலும்;
உனக்கு என்றால் ஓடி வரும் பந்தம்.

உன்னையும் என்னையும் இணைத்த பந்தம்;
உறவுமுறை இல்லாத பந்தம்;
உணர்வால் வந்த பந்தம்;
உதாசீனம் செய்யாத பந்தம்;
உபத்திரம் தறாத பந்தம்;
உண்மையான பந்தம்;
இதுதான் சொந்தம் இல்லாத பந்தம்.

ஒரு மடியில் பிறக்காத பந்தம்
ஒன்றாய் கூடியபந்தம்;
உடன்பட்டபந்தம்;
உயிர்விடவும் துடிக்கும் பந்தம்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (13-Sep-21, 9:46 pm)
பார்வை : 204

மேலே