பனையின் மது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
விந்துதிர மூறுமதி வெப்புடனே தாகம்போம்
பந்தமாந் தாதுவுமோ பாரிக்கும் - உந்துபித்தந்
தோன்றும்பா ஷாணங்கள் சுத்தியுமாந் தோகைமின்னே
யேன்ற பனைமதுவிற் கே
- பதார்த்த குண சிந்தாமணி
பனங்கள் விந்து விருத்தி, சப்த தாதுக்களின் உறுதி, பித்தம் இவற்றையுண்டாக்கும்;.உடல் வெப்பம், அதிதாகம் இவை நீங்கும், பாடாண வகைகளைத் தூய்மை செய்யப் பயன்படும்