தெங்கின் மது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நாதவிந் தூறு நளிர்பாண் டொடுசோபை
வாதபித் தங்கிராணி வன்கரப்பன் - பேதியிவை
பொங்கி யதிகரிக்கும் புத்திகெடும் மேகமுண்டாந்
தெங்கி(ன்)மது விற்கென்றே செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் சுக்கிலப் பெருக்கம், பாண்டு ரோகம், சோபை, வாத பித்த நோய்கள், இரத்தக் கழிச்சல், கரப்பான், பேதி, பிரமேகம் இவையுண்டாகும்