தோழியின் தோழமை

நேரடி தொடர்பு
இல்லை எனினும்
உங்கள் கண் சிமிட்டலுக்கும்
இங்கிலாந்து இளவரசி
சாவுக்கும்
தொடர்பு உண்டு என்கிறது
இயற்பியலின்
கயாஸ் விதி.

ஆனால்,
எனக்கு குழப்பமே இல்லை,
அன்பு,
நேரடியாக இணைக்கிறது
யாவரையும்..

நடுத்தர வயதிருக்கலாம்
அவளுக்கு,
எனக்கும் தான்...

ஏதோ பேசிக்கொண்டிருந்தோம்,
தோழமையுடன்.
இடையில்,

நீ
எனக்கு
அக்காவா....
நான்
உனக்கு
அண்ணாவா...
என்றேன்.

நான்
எதிர்பார்த்த பதில்
வேறு...
ஆனால்
எதிர்பாராத பதில்கள்
எதிர்பாராத இடங்களில் தானே
கிடைக்கின்றன...

"தெரியலியே...
தங்கையும் அக்காவும்
தோழிதானே..."
என்றாள்....

நெற்றிப்பொட்டில்
ஓங்கி அறைந்தது
போலிருந்தது
எனக்கு...

இன்னும்
ஆறுபதாயிரம் ஆண்டுகளானாலும்,
உறவுசாரா
தோழியின் இடத்தை
அன்னையால் கூட
நிரப்ப முடியாது
என்கிறாளோ....

அட...
எனக்கு இது தோணலியே...

எனக்கு
குழப்பமே இல்லை...
ஆனால்
குழப்பமாக
இருந்தது.

✍️கவிதைக்காரன்

(ஆண்கள் திட்டாதீர்கள்... தோழிகளுக்கு மட்டுமே புரியும்)

எழுதியவர் : கவிதைக்காரன் (16-Sep-21, 11:05 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : THOZHIYIN tholamai
பார்வை : 77

மேலே