தேனே திரவியமே
தேனே திரவியமே ...!
பூவே மணமே ...!
நீயே நானே ...!
வானே நிலவே..!
ஊனே உயிரே ...!
வானவில் வண்ணமே ...!
தேனே திரவியமே...!
சற்றே தொலைவில் என் பார்வையில் விழும்போதே ...
பூவே மணமே ...!
தன்னால அவள் பின்னால என் கால்கள் நடக்குதே ...
நீயே நானே..!
என் விழிமடல் விரிந்து
புதைந்திருந்த விழிகள் இரண்டும் ஏதுமறியாத சிறுப்பிள்ளைபோல் ஏனோ முழிக்குதே ...
வானே நிலவே ...!
அவள் கருப்புவெள்ளை கண்ணூ
கடிகார முள்போல்
ஏனோ சுழலுதே ...
ஊனே உயிரே...!
அவள் கண்கட்டுவித்தையால்
கண்மண் தெரியாது நெஞ்சில் ஏதோ ஊஞ்சல் ஆடுதே ...
வானவில் வண்ணமே ...!
இதழில் நகை நான் கொண்டேன்
விழியில் அழுகை ஏன் தந்தாயொ என்னிடத்தே ...