எனைநோக்கி பாயும் பார்வை
நிழலோடு விளையாடும்
அறியாத சிறுபிள்ளைப் போல
நானும் நடந்துகுறேன்
அவ முன்னாலே...
நாணமோடு தினமும்
நண்டூற நடக்குறே
அவ பின்னாலே..
நாளும் அழகான ஆயிரம் பெண்கள் பார்த்தாலும் கண்கள்..
பாட வேலையில் மூளை கற்ற பாடமாக எல்லாம் மறந்தேனடி....
ஆனாலும் பேரழகு
ஒருத்தி உன்னை மட்டுமே
அன்பில் பொருத்தி இதயத்தில் நினைந்தேனடி..
தீப ஒளி நாளிலே
நீ கொழுத்துகிற
பட்டாசு போலவே
எம்மனச கொழுத்தாதடி...
சொல்லாம கொல்லாம போகாதடி
அல்லும் பகலும் அழுவேனடி..
உண்மையில் உன்மேல் நான் அன்பை வைக்கையில்
ஏனெதற்கு குலகோஷ்திர சாத்திரத்தால் இந்த காதல் அழியுனுமடி...
மாறதிரு சோர்வாதிரு
சுற்றார் உற்றார்
பேசுகிற பேச்சிலே...
சுற்றும் நோக்கி சற்றே திரும்பி
என்னை நோக்கி
பாயும் கத்தி பார்வை யினிலே ...
தைய்யத் தக்கனு
தத்தழிக்குறேன்.. குதிக்கிறேன்..
உருகுறேன் உன்னிலே
கரைகிறேன் கனவினிலே
தயங்குறேன் தனிமையிலே...