மஹாகவியை அறிந்திடுவோம்

வங்கம்தந்த கவிஞர் அறிஞர் ரபீந்திரநாத் தாகூர்
வங்கத்தின் ஒவ்வோர் இல்லத்திலும் இன்றும்
தாகூரின் 'ரபீந்திர சங்கீதம்' ஒலித்துக்கொண்டே இருக்கும்
கொல்கத்தா வானொலியிலும் நித்தம் அவர் கீதம் ஒலிக்கும்
தாகூரின் 'கீதாஞ்சலி' அவருக்கு 'நோபல்' பரிசும் தந்தது
'விஸ்வபாரதி' அவர் நிறுவிய பல்கலைக்கழகம்
தாகூர் நம் தேச கவிஞர்

கொஞ்சம் நம் தமிழகத்தின் கவிப்புயல்
மஹாகவி பாரதிக்கு வருவோமா......
பாரதி கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு தீர்கதரிசி
சுதந்திரம் அடையும் முன்னே நாடு
சுதந்திரம் அடைந்ததை கண்டுகொண்ட தீர்கதரிசி
அவர் எழுதிய அந்த வரிகள்' ஆடுவோமே பள்ளு பாடுவோமே'
பல ஆண்டுகள் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட
'மகோன்னத கீதம்' 'சுதந்திர கீதம்
பாரதி எழுதாத தலைபோன்று உண்டா சொல்லுங்கள்
கண்ணன் கீதையை பாமரரும் புரிந்துகொள்ள
'தமிழ் ஆக்கம்' செய்தார் நம்கவிஞர்
பக்தி, பெண்ணுரிமை, பாஞ்சாலி சபதம்
என்று பாரதி பாடிய ஒவ்வொன்றும் ஒரு 'நோபல் பரிசு'
கவிதை என்றால் மிகை ஆகாது....
பாரதி சுதந்திரபித்தாகம் வளர்த்த புரட்சி கவிஞர்
ஆங்கிலம். வடமொழி போன்ற மொழிகளிலும்
பாண்டித்யம் பெற்றவர் நம் கவிஞர்

இதோ இந்த ஆண்டு அவர் மறைவு நூற்றாண்டு
தமிழரே நம் பாரதியை அவர் கவிதைகளை
இன்னும் அவர் விட்டுச்சென்ற கட்டுரைகள்
என்ற இவற்றை எல்லாம் உலகறிய செய்வோம்
பள்ளிகளில் பாரதி பாடல்கள் கேட்கவேண்டும்
இல்லங்கள் தோறும் பாரதி கீதங்கள் ஒலிக்க வேண்டும்
நம் சிறுவர்கள் பாரதியை அறிந்துகொள்ள வேண்டும்
அவர் காட்டிய நெறியைத் தெரிந்திட வேண்டும்

என்றும் பாரதி நீடு வாழ வேண்டும்
'தாயின் மணிக்கொடியில் பாரதியை நான் காண்கின்றேன்
வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்க பாரதம்
வாழ்க வாழ்கவே பாரதி....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Sep-21, 2:48 pm)
பார்வை : 94

மேலே