வாள் அவரைக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அதிபித்தம் வாந்தி அரோசகமும் உண்டாங்
குதிவாதம் வாய்ச்சுரப்புங் கூடுந் - துதிசக்ர
வாளவரை யொத்த வனமுலைமா தேபெரிய
வாளவரைக் காயால் மதி

- பதார்த்த குண சிந்தாமணி

இக்காய் பித்தம், வாந்தி, சுவையின்மை, குதி வாதம், வாய் நீரூறல் ஆகியவற்றை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 8:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே