அவரைக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கொட்டையவ ரைக்காயால் கோர அரோசகநோய்
கிட்டாதென் பார்மருந்தின் கீர்த்திகெடுந் - துட்டமந்தம்
பையவுண்டாம் பேதியுண்டாம் பாரிப் பனிலமுண்டாம்
ஐயமுண்டாஞ் சூலையுமுண் டாம்

- பதார்த்த குண சிந்தாமணி

முதிர்ந்த அவரைக் காயினால் சுவையின்மை, மருந்தின் நன்மை இரண்டும் நீங்கும்; அக்கினி மாந்தம், அதிசாரம், உடல் எடை அதிகமாதல், வாததோடம், சிலேட்டுமம், குத்தல், மந்தம் இவை உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 8:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே