முத்தமிழ்
முத்தமிழ் சித்தரித்த உடையே...
முக்கனி தேன் சிந்தும் சிரிப்பே...
மூதுரை செப்பும் சிவந்த திருமேனியே...
முத்திரையில் முத்தமிடும் என் சித்திரமே...
கலையில் நீ அழகிய ஓவியமே...
விழியோரம் கவிபாடும் கலையெனும் சிலையே...
அன்பெனும் மொழியே...
இன்பத்தின் ஒளியே....
நீ அனைவருக்கும் இன்பத்தின் ஒளியே...
முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ
யாவரும் அறிந்த பாரதி கண்ட
யாவரும் அறிந்த பாரதி கண்ட
புதுமை முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ
இ சொற்றொடர் கொய்து
நாவினால் மொழிந்தால்
யாவரும் இ சொற்றொடர் கொய்து
நாவினால் மொழிந்தால்
நல் உறவும் அறமும்
உள்ளத்தில் பெருகும்.
முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ...