தோதிலா காதலின் - கட்டளைக்கலித்துறை

காதலால் காமம் பொருந்தா கலவியும் கொண்டதாலே
பாதையும் மாறியே பற்பல தொல்லையால் வாழ்க்கையுமே
தோதிலா காதலின் தன்மையை பற்றிய பின்னாளிலே
மேதகு வாழ்கையை வாழுதல் என்பதோ சாம்பலாமே ---- (1)

உளுந்தும் அரிசியும் ஆட்டியே சேர்ந்திட மாவெனவே
வளர்ந்து நிலைபெறும் காதலில் இல்லை குறையொன்றுமே
களிப்பின் மிகுதியால் காமம் எழுச்சியால் சூழப்பட்டே
துளியும் பயமிலா தன்மையில் மீறினால் துன்பந்தானே ---- (2)

மயக்கம் தருமே மனதையும் மாற்றிடும் காதல்களே
இயங்கும் எதையும் சிதைக்கும் எதிராய் நடத்திடவே
முயலும் பதறா நிலையிலே சென்றே அழித்திடுமே
உயர்வை ஒடுக்கி முடக்கிடும் காதலை நீக்குவோமே ---- (3)

மென்மை உணர்வுத் தருவதை காமத் தினுடனேயே
வன்மையாய் கைக்கொள் ளவேத்துணிந் தேபலர் வீழ்ந்தவாறே
தன்னிலை நீங்கியே காதல் புதைகுழி யில்மூழ்கியே
பொன்வாழ் வினைஇழந் தேதளர் வுற்றதாய் ஆக்கிடுமே ----(4)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Sep-21, 11:04 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 48

மேலே