தீக்காய்தல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தீக்காயில் வாதமொடு சீத நிவாரணமாம்
ஊக்கமிகு தாகமதி யுட்டிணமும் - நீக்கா
இரத்தபித்த நோயும் இரத்தக் கொதிப்பும்
உரத்தெழும்பு மென்றே யுரை

- பதார்த்த குண சிந்தாமணி

வாதம், சீதம் இவை குறையும்; தாகம், அதிக வெப்பம், இரத்த பித்தம், இரத்தக் கொதிப்பு இவை தீக்காய்தலால் அதிகமாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-21, 11:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே