இராவணனும் இராமாயணமும்

தசமுகன் ராவணன் என்றால் நாம்
இது சாத்தியமில்லை என்று கூறி
நம் இதிகாசங்களை எள்ளி நகையாடுகிறோம்
கொஞ்சம் யோசித்து பாருங்கள் புரியும்
இதன் பின் காணும் தத்துவம்.....
இப்பறந்த உலகில் நம்மிடையே நாமறிந்தே
எத்தனையோ மனிதர் இரு முகம்
கொண்டு திரிகின்றார் அகமுகம் ஒன்று
புறமுகம் ஒன்றென்று இப்படி கலியுகத்தில் இருக்க
த்ரேதா யுகத்தில் வாழ்ந்த இராவணன்
பத்தவித மனம்கொண்டு வாழ்ந்திருக்கலாம்
அந்த பத்துவித அவன் கர்வங்களை நசித்து
அவனை மாய்த்து வெற்றிகொண்டான் இராமன்
என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்
இராமாயணம் ஒரு நாளும் கீமாயணம் ஆகாது
நல்லதைக் கூறி நம்மை நலம்பெற வாழவைக்கும்
இராமாயணம் நாம் போற்றி காக்கவேண்டிய
காலம் தீண்டா பொக்கிஷம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Sep-21, 2:09 pm)
பார்வை : 65

மேலே