திரும்பிவா சேர்ந்திடவே

நேரிசை வெண்பாக்கள்
(1)
பிரிக்க முடியா ததுதமிழும் சைவம்
பிரியாது தீந்தமிழ் செவ்வேள்-- சிரிக்காதீர்
சேர்ந்தே யிருக்குமாம் இந்தும் தமிழரும்
சேராமுஸ் லீம்கிருத்து கேள்

(2)
சொல்வர் கிருத்துமுஸ் லீம்தமிழர் என்றுமது
செல்லாத வர்வேறு வேறாம்நாம் ---- சொல்லுமே
அல்லாமெக் காமதினா ஐயனேசு இஸ்ரவேலர்
சொல்லீச னிந்துமுரு கொன்று

(3)
பாருதிரு நீற்றைநீ பாய்ச்சிடு நெற்றியங்கம்
காரும் தமிழரின் நல்மதத்தை -- போருஞ்செய்
யாருனை வெல்வாரிம் மண்ணில் துணிந்துநில்
நேரிடுஞ் சம்ரதில் வெல்லு

(4)
பாரத மும்தமிழும் பக்தி இணையாமே
பாரதயீ சன்தெற்கில் நல்லசிவம் --- பாரம்
தமிழர்கேன் தெற்குவடக் கெல்லாம்நாம் இந்து
தமியராவோம் நாம்பிரிய பாரும்

(5)
பார்க்க முருகின் அழகும் தமிழையும்
பார்த்து ஒதுக்கிடு அந்நியர் -- சேரா
உறவுகொள்ள குட்டை உழல்வாய்நீ ஆகார்
உறவித் தமிழர்க்கு சொல்

(6)
இயலிசை நாடகம் இல்லை உனக்கு
தயவாய் உறவாடார் பாரு --- கயவன்
அயலானா கித்தேடு வாய்ப்புது சுற்றம்
பயமின்றி செய்வாய் தவறு

(7)
சரஸ்வதி லட்சுமி சக்திமறப் பாயோ
பரதெய்வம் ஆகாநம் தெய்வம் - இரவுபகல்
வெம்பி அழுவாய் தினமும் வருந்தியே
இம்மட் டிலும்வா திரும்பு

எழுதியவர் : பழனி ராஜன் (29-Sep-21, 9:49 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 137

மேலே